பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வீர சுதந்திரம் நாடு விடுதலைபெறும் என்ற நம்பிக்கை எமக்கில்லைசோவியத் ரஷ்ய நாட்டில் லெனின் தலைமையில் ஜார் ஆட்சி வீழ்ந்ததுபோல், ஆயுதமேந்திய புரட்சிதான் ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகற்ற முடியும் என்பது எமது கம்பிக்கை. ஏகாதிபத்யம் வீழ்வது மட்டுமல்ல...வெள்ளையன் ஓடியதும், இங்குள்ள கொள்ளே வியாபாரிகளுக்கு நம் காட்டை அடகு வைப்பதல்ல எம் லட்சியம் பொதுவுடைமையை இந்தியாவில் அமைத்திடல் வேண்டும். இதற்கு எம் உயிர்த் தியாகம் பயன்பெறுதல் வேண்டும்!! வக்கீல் : அப்படியானுல்? பகத்சிங் : அப்படியானுல்-காங்களெல்லாம் காட்டில் புதுயுகம் மலர்வதற்காக அமரர்களாகப் போவதாக அர்த்தம். எங்கள் முறை அரசுக்குப் பிடிக்கவில்லை. இந்த உருவங்களை பிரிட்டிஷ் ராஜதந்திரம் என்ற பாசக்கயிற்றிலே தொங்க விட்டு அதுதான் ரீதியின் தராசு என்று உலகுக்குச் சொல்லத் தீர்மானித்து விட்டது! வக்கீல் பகத்சிங்! பகத்சிங் . ஏன்? கேட்கவே பயமாக இருக்கிறதா? என்ன செய்வது? எம் உருவம் அழகாய் இல்லையாம். அது அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதற் காக அதைச் சாம்பலாக்க முடிவு செய்துவிட்டார்கள் வக்கீல் பகத்சிங்! பகத்சிங் : பயப்படாதீர்கள். இப்போது கான் ஒரு சாதா ரண கைதி. என்னிடம் துப்பாக்கி இல்லை; வெடி குண்டு இல்லை.