பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 159 மேலும் போலீஸ் பயமுறுத்தினு பின்வாங்கி ஓடாத துணிச்சல் வேணும் தம்பி. ராமன் : அண்ணு! ஆளைப் பார்த்து எடை போடதீங்க ஆளு பலே ஆள். குமரனைப் பல வருஷமா தெரியும். வைரம் பாஞ்ச மனசு இடி விழுந்தாலும் கலங்க மாட்டார். சுந்தரம் : கலியாணம் ஆயிட்டுதா? குமரன் ; ஆயிடுச்சிங்க. சுந்தரம் : உங்க துணைவியின் சம்மதம்? ராமன் : எல்லா சம்மதத்தையும் வாங்கிக் கொண்டு தான் வந்திருக்கார். அவங்க அப்பா இல்லை. அம்மா இருக்காங்க. அவங்க குடும்பம் ஏழையா இருக் தாலும் வீரமுள்ள குடும்பம். சுந்தரம் : ஏம்பா, உன் குடும்பமோ ஏழை. உன்னையே கம்பி இருக்க-ரீ தேசத்துக்காகத் தொண்டு செய்ய வந்திருக்கே. நல்லா யோசனை செய் குமரா! எங்களை யெல்லாம் பார்த்து உ ண ர் ச் சி வசப்பட்டோ. அவசரப்பட்டோ, திடீர் முடிவுக்கு வரவேண்டாம். காங்கள் பல வருஷமா மனசைப் பண்படுத்தி கடைசியா இந்த முடிவுக்கு வந்திருக்கோம். உனக்குக் கடைசியா ஒன்னு சொல்றேம்பா, குமரா, ஏதோ கொடி ஏந்தி-பாட்டுப் பாடி-மகாத்மா காந்திக்கு ஜே போட்டுட்டு போயிடலாம்னு கினைக்காதே. அப்படி எண்ணி இதிலே ஈடுபடக்கூடாது. வர வர நம்ம ஊர் போலீஸ் ரொம்பக் கடுமையா இருக்கு