பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 189 கந்த : அப்படினு புரியவில்லையா? கோயில் தர்மகர்த்தா சிலையைத் திருடக்கூடாது. பேங்க் கேஷியர் பேங்க் பணத்தை தனது என்று எடுக்கக்கூடாது. நான் உமது ஆகாரத்தைத் திருடக் கூடாது. சரியான சமுதாய வில்லன் நீர் (பணத்தை எறிகிருன்) சோணு : தம்பி என்னைப் பகைச்சிகிட்டு இந்த ஊர்லே வாழ முடியும்னு நினைக்கிறியா? இந்தப் பாரு! நீ மேடை மேடையாப் பேசலாம். கூடை கூடையா மாலை போடுவான். ஆணு ஒரு பயலும் ஒருவேளை சோறு போடமாட்டான். கந்த என்ன மிரட்டுகிறீர்? சோற்றுக்கும் சுகத்துக்கும் அடிமையாகும் சோம்பேறியலல்ல நான். 60 நாள் பட்டினி கிடந்த அனுபவம் எனக்கு உண்டு. சோணு : இந்த மகாத்மா சாட்சியா சொல்றேன், நீ மனம் மாறின கல்லது. கந்த மாறுபவன் மாறட்டும். சத்தியம் மாருது அந்த சத்தியத்தின் ஒளியைத்தான் மகாத்மா உருவத்தில் நாம் சந்தித்தோம். அவர் தந்த விடுதலையால் ஏதோ சுதந்திரம் வந்தது. அதன் பயனுக சுபிட்சம் வந்தது. அந்த சுகபோகத்தை உங்களைப் போன்றவர் அகம் பாவத்திற்குப் பயன் படுத்துகிறீர்கள். மகாத்மாவின் பெயரால் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்கள் நிகழ்கின்றன. இந்த காட்டில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டின் தலைவிதியை ஆண்டவனல் கூட மாற்ற முடியாது. நான் வருகிறேன். சோணு : அப்படின்ன என் தேர்தல் என்ன ஆகிறது?