பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 45 போயிடும். போன ஜன்மத்துக் காக்காக் கூட்டம், இந்த ஜன்மத்திலே இந்திய நாட்டு ஜனக்கூட்டமா பொறந்துட்டு அலையுதுகள். ஒத்துமையில்லாத சுத்த வெத்துவேட்டுகள். - வாஞ்சி : மாமா! ஞாபகமிருக்கட்டும் நாம் பலர், அவர் Fl6V#! சங்கரன் : பலர் சிலர்! வாஞ்சி, இந்தக் கலர் பேச்செல் லாம் இனிமே எடுபடாது.டா! கோடி கோடியா ஈசல் புறப்படும். ஒரு சிறு மழை பேஞ்சா போதும், அவ்வளவும் இருக்கிற இடம் தெரியாம அழிஞ்சி போயிடும். ஆங்கிலேயர் சிலர்தாண்டா. ஆனல் அவங்ககிட்டே நிறைய ஆயுதபலம் இருக்கு அதை விட அவனுக்கு இருக்கிற மனுேபலம் நம்மவாளுக்கு இரதுடா? - - வாஞ்சி : என்ன சொன்னலும் உங்க மரமண்டையை மாத்த முடியாது. - சங்கரன் : டேய்! உம் மாமிகூட என்னைப் பார்த்து இப்படிச் சொன்னது கிடையாது.டா. சரி போ. சுதந்திர வீரன். சொல்லிட்டே நானும் பொறுத் துன்டேன். மரமண்டையா, இரும்பு மண்டைன்னு சொல்லுடா. சமயம் வந்தா, நானும் உன்னைவிட வீரணு மாறிடுவேண்டா. சரி, என்னை மாத்தறது அப்புறம் இருக்கட்டும். ஒரு வாரமா நீ வீட்டுப் பக்கமே போகலியாமேடா. இப்படி புது மாப்பிள்ளை வீட்டைக் கவனிக்காமே, ஊரையே சுத்திண்டு இருக்கிறது நல்லதில்லே. டோ போ. இந்த நாடு கீடு, சுதந்திரம் கிதந்திரம் எல்லாத்தையும் மூட்டை கட்டி, போட்டுட்டு, பொன்னம்மாவோடு செளக் கியமா இரு ஏதோ உங்கப்பா கவர்ன்மென்டிலே