பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வீர சுதந்திரம் வாஞ்சி : அன்னே அளித்த ஆணை இது. இதை மாற்றவோ மறுக்கவோ யாருக்கும் உரிமையில்லை. நீலகண்ட : (சிரிப்புடன்) வாஞ்சி, அன் ஆன யி ன் ஆணையை யாரும் மீறவில்லை. ஆனல் தன் தம்பிக் காக, ஒரு அண்ணன் பலியாவதை அன்னை ஒரு போதும் தடுக்கமாட்டாள். கொஞ்சம் பொறுமை யாக யோசித்தால் என் வார்த்தை உங்களுக்குப் புரியும். மாடசாமி ஆம் தம்பி, அவர் சொல்றபடியே செய் வோம். உனக்குப் பதில் நான் போகிறேன். (எல்லோரும் கலங்குகிருர்கள்) வாஞ்சி : ஏனய்யா இப்படிக் கலங்குகிறீர்கள்? வீரமாகப் பேசுவதெல்லாம் வெறும் வாயளவில்தான செயல் என்று வரும்போது ஏன் இப்படி அஞ்சி கடுங்குகிறீர் கள்? நான் போனுல் என்ன முழுகிவிட்டது. பாரதப் போரில் ப லி யா ன அரவானும், அபிமன்யுவும் இளைஞர்கள்தானே? உலகம் தோன்றிய நாள் முதல் தர்ம யுத்தத்தின் வேள்விக்கு முதல் பலியானவர்கள் வாலிபர்கள்தான். ஆனல் நான் அவர்களைப்போல் மடிய மாட்டேன். எதிரியின் உயிரை முடித்து வெற்றியுடன் திரும்பி வருவேன். இது சத்தியம். விடை கொடுங்கள்! உம். நீலகண்ட வாஞ்சி கில், நீ போக வேண்டாம். வாஞ்சி : தடுக்காதீர்கள் வார்த்தை ஒன்றுதான் என்பது மனிதனுக்கு மட்டுந்தானு: பராசக்திக்கு இல்லையா? - - -