பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 8 காலம் : பகம் இடம் : மணியாச்சி ஜங்ஷன், நிகழ்ச்சி ; கலெக்டர் ஆஷை வீரன் வாஞ்சி சுட்டுக் கொல்லுதல். - பாத்திரங்கள் ஆஷ், வாஞ்சி, சி. ஐ. டி. இன்ஸ்டெக்டர் கிட்டு, இரு போலீஸ்கள். (ஆஷ் துரை பிளாட்டாரத்தில் தன் வண்டியின் சன்னல் அருகே நின்று பேப்பர் படிக்கிருன். போலீஸ் சி. ஐ. டி. இருக்கிருன்i ஆஷ் : (பேப்பர் படித்தல்) வங்காளத்தில் பயங்கர இயக் கம். ஜில்லா கலெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திர வீரர்களுக்குத் துக்குத் தண்டனை பயங்கர இயக்கம்! இங்கு கடக்காது. கடக்க விடமாட்டேன். திஸ் ஆஷ் வில் ஸ்மேஷ் தி ரிவொல்யூஷன். இன்ஸ் பெக்டர், ட்ரெயின் புறப்படடயம் ஆகும். யூ கெட் மி சம் காபி. போலீஸ் : எஸ் சார். இன்ஸ்பெக்டர் போகிருன் பிறகு வாஞ்சி அருகே வருகிருன்..! வாஞ்சி : என்ன திருநெல்வேலி கலெக்டர் மாண்புமிகு மிஸ்டர் ஆஷ் துரை அவர்களே! குட்மார்னிங், என்ன. செளக்கியமா? எப்படி இருக்குது உம்ம துப்பாக்கித் துரைத்தனம்?