பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வீர சுதந்திரம் களுக்கு மட்டும் உயிர்ப் பாசம் இல்லையார அலறித் துடித்த அந்த அபலைகள், வாழ உரிமையற்ற அடிமைகள் என்றுதானே வெறிகொண்டு வேட்டை யாடிய்ை? ஆஷ் : கடந்ததையெல்லாம் மறந்துடு. இந்த ஒரு தடவை மட்டும் என்னே மன்னிச்சிடு. ப்ளீஸ். ப்ளிஸ் வாஞ்சி : மறப்பதும் மன்னிப்பதும் தலைவர்கள் வேலை: கான் தொண்டன். என் வேலையைச் செய்வதே என் Gi–GÖDLD. ஆஷ் : ஒரு தடவை ஆண்டவனுக்கு ப்ரேயர் பண்ண டைம் கொடு மிஸ்டர். ப்ளீஸ். (என்று அவன் கோட்டுப் பைக்குள் கையைவிட ரிவல்வரால் ஆளை சுட்டு விடுகிருன். சி. ஐ. டி. (காபியுடன்) சார் காபி ரெடி. (சி. ஐ. டி. இன்ஸ்பெக்டர் கிட்டு வந்தது தெரிந்த வுடனே வாஞ்சி, ஆஷ் துரையை மூன்றுமுறை சுட்டு வேட்டை யாடிவிட்டு மறைகிருன். உள்ளே போனவுடன் போலீஸ் துரத்த மீண்டும் மேடைக்கு வருகிருன். அங்கே ஆண்கள் என்ற போர்டுக்கு அருகில் உள்ளே ஓடி தன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளுகிருன்-தன் தாய்நாட்டை அவமானப் படுத்திய வெள்ளையனைக் கொன்றது யாரென்று அடையாளம் கண்டு ஆபத்து வரும்-அந்த ஆபத்து அவர்களுக்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு அமரனுகிருன் அந்த மாவீரன்.) காட்சி முடிவு