பக்கம்:வெங்கலச் சிலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெங்கலச்சிலை


விளாடிவாள்டாக் பொது உடைமைப் பொன் நாட்டின் புரட்சி வேந்தன் லெனின் ஐரோப்பாவின் முதலாளி நாடுகளை வெங்கலச் சிலையுருவில் பார்க்கின்றான். மக்களுடைய ரத்த நீர் வார்த்து வளர்த்த பூங்கா. பணப் பேழைகள் பருவம்போல் வளர, தீவிர சிந்தனையாளர்கள் தீட்டிய திட்டத்தால், எல்லாருக்கும் எல்லாம் எனுமளவுக்கு, பண உலகத்தைத் தொழில் திறமையால் சிங்காரித்து, அந்தக் களைப்பால் கைகால் சோர்ந்து விழுந்து கிடந்த தொழிலாளர்களைத் தட்டி எழுப்பிய மனிதகுல மாணிக்கத்தின் சிலை. மானிடவர்க்கம் மனதார தலை வணங்கிய மண் பொதுத்தந்தையின் சிலை. அதிகார மமதையை ஆட்டிக் குலிக்கிய அஞ்சா நெஞ்சன் சிலை. தனது புரட்சித் தமுக்கில் பயங்கர ஓசையை எழுப்பி அகிலத்தின் அண்ட முகடெல்லாம் அதிர்ச் செய்த மாவீரனின் சிலை.

மனிதாபிமானமற்ற மன்னர்களின் கிரீடத்தை மண்ணில் உருளச் செய்து, மனித சக்திக்குப் புதிய உணர்வளித்த உத்தமனின் சிலை.

சற்றேறக்குறைய முந்நூறு ஆண்டுகள் மங்கோலியாவுக்கு அடிமைப்பட்டுக் கிடந்து, பயங்கர ஈவான் என்ற வீரனால் மீட்கப்பட்டு, பீடர் பெரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/5&oldid=1324163" இலிருந்து மீள்விக்கப்பட்டது