பக்கம்:வெங்கலச் சிலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வெங்கலச்சிலை


ரால் செம்மைப் படுத்தப்பட்டு, பரம்பரை பரம்பரையாக, ராம் நோவ் குடும்பத்தார்கள் எனும் ஜார் குடும்பத்தாரால் ஆளப்பட்டு, கடைசி மன்னனான இரண்டாவது நிகோலாஸ் என்ற கொடுங்கோலனான ஜார் மன்னனை, வேட்டையாடி வெட்டி வீழ்த்தி மாபெரும் புரட்சியையுண்டாக்கி அவன் வாழ்ந்த மண்டலத்துக்கு வாழ்வளித்த மனித வர்க்கத்தின் சாட்சியான, வீரன் லெனின் வெங்கலச்சிலையையே இங்கு குறிப்பிடுகிறோம்.

மார்க்க போதகர்கள், மதவாதிகள், ஆண் மார்த்தீக வாதிகள், தங்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில், தங்கள் கற்பனா சக்தியால், பல மண்டலங்களையுண்டாக்கி, அதில் ஒன்றான பர மண்டலத்தின் வழி காட்ட, பாவங்களை மன்னிக்க, பாதத்தில் விழுந்து பாமர பக்தர்கள் கும்பிட, பாத காணிக்கை செலுத்த, பலமான கற்கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் செம்புச் சிலையைப்பற்றியல்ல நாம் இங்கு குறிப்பிடுவது.

வாழ்விழந்த மனித சமுதாயம் வஞ்சனையால் வாட்டப்பட்டதை எண்ணி, மனம் குமுறி நெஞ்சையள்ளும் விதமாக, வெஞ்சமரில் போராடப் பஞ்சைகளை அஞ்சாத வீரர்களாக்கி மறுமலர்ச்சி கண்ட செஞ்சொல் வீரன், புது யுகங்கண்ட புனிதன், பழமையை வெட்டிச் சாய்த்த வீர வேங்கை, புரட்சியின் கர்த்தா, அசையாது மக மேருவைப் போன்றிருந்த அந்த உலக ஏற்பாட்டை சிறுகச் சிறுக, ஆனால் விறு விறுப்பாக வீழ்த்திய வீரத் தோன்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/6&oldid=1315727" இலிருந்து மீள்விக்கப்பட்டது