பக்கம்:வெங்கலச் சிலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

7


விளாடிவாஸ்டாக் நகரில் வெங்கல உருவில் பார்க்கின்றான்.

ருஷ்ய அரச பரம்பரையின் அகம்பாவக் கோட்டையை அசைத்துக் காட்டினான். அவர்கள் அன்று வரை மாசில்லாத அரசாங்கம் என எண்ணியிருந்த கௌரவக் கண்ணாடியில் புரட்சி என்ற ஓர் களங்கக் கோட்டை வரைந்து காட்டினான்.

ருஷ்ய ராணுவத்தமுக்கில் பேரோலி எழுப்பிப் பெரும்படை ஒன்று திரட்டினான். வீறுகொண்டெழுந்த மக்களின் விண்ணப்பங்களை வாங்க மறுத்த வேந்தனை வேரற்ற மரம்போல் சாய்த்தான். செயலற்றுக் கிடந்த மக்களைச் சிந்தனை யந்திரமாக்கினான். கருத்தென்ற எண்ணெய் யூற்றினான். புரட்சி என்ற புயல் வேக விசையளித்தான். வானம் மின்னி அதிர்வதுபோல் கர்ஜித்தான்.

வாழப்பிறந்த மக்களே! ஏன் செத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன் மாமிச மலை போல் அசையாதிருக்கின்றீர்கள். பகுத்தறிவில்லா மானிடரா நீர்! பதறவில்லையா உங்கள் நெஞ்சம். பார்த்திபன் கொடுங்கோல் உங்கள் உள்ளத்தில் சூடேற்ற வில்லையா? பாராள்வோன் பகைக்கஞ்சுகின்றீர்களா? அப்படியாயின் சதையைச் சுமந்து நிற்கும் சுமைதாங்கிகளா? உங்கள் உணர்ச்சி எங்கே! வீரக்குரல் எங்கே! சுதந்திர எண்ணமெங்கே! தேவை மலைபோல் இருக்கின்றது. ஆனால் நீங்கள் ஆமைபோல் இருக்கின்றீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/7&oldid=1457176" இலிருந்து மீள்விக்கப்பட்டது