பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 5 தொகையைப்பெற்றுக் கொண்டு கலைவான்’ என்ற அதி: காரிக்குக் கொடுக்க, அவன் பிறகு எதிர்பாரத விதத்தில் அபின் பழக்கமில்லாத வேறு பிரதேசத்திற்கு உத்தியோக முறையில் மாற்றப்படவே. தன் ஒப்பந்தத்தை வேறு ஒரு * பின்' என்பவனுக்குப் பெரும் இலாபத்தோடு நாற்பதி னாயிரம் பவுனுக்கு விற்க நேர்ந்தது. அதே நாளில் பின் என்பவன் பல கிராக்கிகள் ஏற்பட்டதை முன்னிட்டு இன்னொருவனுக்கு அந்த அபின் ஒப்பந்தத்தை அறுபதி, னாயிரம் பவுனுக்கு விற்றானாம். 0 நூல்: மூலதனம் (1987) பக்கம்: 56, 47. நூலாசிரியர்: ம.சிங்காரவேலுபி.ஏ.,பி.எல்.,

r வைஸ்ராய் இஸ்மேல்

தொண்ணுறு வருடங்களுக்கு முன்புகூட ஒரு வார்த் தையின் மதிப்பு 15 லட்ச ரூபாயாக இருந்திருக்கிறது. 1867-ம் ஆண்டு. எகிப்து துருக்கி மன்னர்களின் ஆளுகைக் குட்பட்டிருந்தகாலம். எகிப்தில் வைஸ்ராய்ஆக இஸ்மேல் என்பவன் இருந்தான். அப்போது பெள பாஷா என்பவன் துருக்கியின் மந்திரி பதவி வகித்தான். துருக்கி சுல்தானிடம் சிபாரிசு செய்து தனக்கு "கேடிவ் என்ற பட்டத்தை வாங்கித் தருவதற்காக இஸ்மேல் மந்திரிக்கு, 15 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தான். 0 நூல்: அதிசயச் செய்திகள் (1959) பக்கம் 103. நூலாசிரியர்: சரோஜினி சங்கர்