பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகை நாயனாரின் மனைவி இயற்பகை நாயனார்- சோழ நாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில் வைசியர் குலத்திலுதித்துச் சிவனடியவர்க்கு வேண்டியவைகளைக் கொடுத்திருக்கு நாட்களிலே சிவ பெருமான் ஒரு காமுக வேதியருருக்கொண்டு வந்து அவர் மனைவியைத் தாம் பெற்றுச் செல்கையில் வழியில் சுற்றத் தார் தடுக்க நாயனார் அவர்களுடன் போரிட்டு விலக்கி மனைவியாரை வேதியர்க்குப்பின் அனுப்ப, வேதியர் திருச்சாய்க்காடு என்னும் சிவஸ்தலம்வரை நாயனார் பின்வரச் சென்று, நாயனார் நிற்றல் கண்டு ஏதோ பயந் தவர் போல் கூவ, நாயனார் கேட்டு விரைந்து செல்லச் சிவமூர்த்தி தரிசனந்தர முத்தி பெற்றவர். 0 நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம்-103. நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார்.