பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பிரோஸ்பூரில் ஒருத்தி பிரோஸ்பூரில் சில தினங்களுக்கு முன் ஒரு வினோத மான வழக்கு நடந்ததாம். இதில் ஒருவன் தன் பெண் ஜாதியை மற்றொருவன் இழுத்துக்கொண்டு போய் விட்டதாகக் குற்றம் சாட்டினானாம். ஆனால் விசாரணையில், குற்றம் சாட்டினவனிடத்தில் இவன் 16ரூபா கடன் வாங்கிக் கொண்டதாகவும், அதைச் செலுத் துகிற பரியந்தம் வட்டிக்குப் பதிலாய் அவனிடத்தில் தன் பெண் ஜாதியை விட்டு வைத்ததாகவும் தெரிய வந்ததின் பேரில் வழக்கு தள்ளிவிடப்பட்டதாம். e இதழ் : ரீலோகரஞ்சனி 1-9-1890. தேவநல்லூர்ப் பெரியப்பன் பிள்ளையின் - மனைவி தேவ நல்லூர்ப் பெரியப்பன் பிள்ளை என்பவர்இவரது கொடையின் மகிமையை, ஒரு புலவர். திருவாங் கூர் அரசரிடம் புகழ, அரசர், பொறாமையுற்று இகழ்ந் தனராம். தாம் கூறியதன் உண்மையை நிரூபிப்பதாகச் சபதம் செய்து புறப்பட்டு 'ஏறும் குதிரைக்குப் புல்லும் . என்னும் தொடக்கத்துச் சீட்டுக்கவியை முன் அனுப்பி, தள்ளிரவில் சென்றடைந்தனர். மற்றச் செளகரியங் களை யெல்லாம் செய்து கொடுத்துப் புலவரை உபசரித்த பெரியப்பன் பிள்ளை, அவர் படுக்கைக்கோர் பெண்பாலின்றித் தமது தரும பத்தினியையே இசையும் படி வேண்டினராம். இதையறிந்த புலவர் அவரைப் புகழ்ந்து கொண்டாடி, அரசரிடம் அவருடைய நிகரற்ற ஒளதாரியத்தைத் தெரியப்படுத்தித் தாம் முதற்கண் கூறியதை நிரூபித்தனராம். - ---