பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II: 9 e இதழ்: தமிழர் நேசன் (காளயுக்தி வருடம் ஐப்பசி மீ) தொகுதி-11 பகுதி-2 பக்கம்87, 103. ஹிரோபி வட்னாபி பூரீ ஹிரோபி வட்னாபி என்னும் 2 வயதுடைய ஜப்பானிய வாலிபர் டோக்கியோ நகரசபைத் தேர்தலில் ஒர் அபேட்சகராக நிற்க விரும்பினார். ஆனால் ஜாமீன் கட்ட 12 பவுன் வேண்டும். கையில் ஒரு காசு மில்லை. கடன் கொடுப்பவரைக் காணோம். நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தேதியும் நெருங்கிவிட்டது. என் செய் வார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு விபசார விடுதிக்குச் சென்று 12 பவுனுக்குத் தன் மனைவியை விற்றார். தேர்தலிலும் போட்டியிட்டுப் பெரும்பாலான ஒட்டுக்களால் வெற்றி பெற்றார். இவர் அபேதவாத பாமரக் கட்சியைச் சேர்ந்தவர். டோக் கியோ நகர சபையில் இவர்தான் இளைஞர். இவருடைய அபேத வாதக் கட்சியினர் இவருடைய மனைவியை மீட் பதற்காக இதுவரை 10 பவுன் சேர்த்துவிட்டார்கள். கூடிய சீக்கிரம் இவ்வாலிபரின் மனைவி மீட்கப்படலாம். 0 இதழ் : கிராமணி குலம் 10-2-1937.