பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 0 நூல்: அபிதான சிந்தாமணி (1910). பக்கம்-63, 64. நூலாசிரியர்: ஆ. சிங்கார வேலு முதலியார். (சென்னைப் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் உபாத்தி யாயர்) - பட்டுக்கோட்டை வேங்கட சுப்பையா சுவாமிகள் (1803-1873) ஞான சித்தர் பூரீ வேங்கட சுப்பையா சுவாமிகள் பட்டுக்கோட்டை நகரையடுத்த சொக்கநாதபுரம் என்ற சிற்றுாரில் பிறந்தவர்கள் என்று தெரிகின்றது. அச் சுவாமிகளுக்கு ஒரு சமயம்-தவறான காம நோக்கம்' ஏற்பட்டதாகத் தெரிந்ததும் - உடனே அவர்கள் அருகாமையிலிருந்த ஒர் மூங்கிற் சோலைக்குச் சென்று ஒரு புற்றின் மேலே தட்டி "நாகம்மா! வெளியே வா’’ என் அழைத்தார். உடனே அந்தப் புற்றிலிருந்து நாகப்பாம்பு ஒன்று சீறி எழுந்தது. சுவாமிகள் தமது குறியைக் காட்டி இந்தப் பயலுக்குத் திமிர் அதிகம் உண் டாகி விட்டது. இவனுக்கு இரண்டு போடு' என்று சொல்ல, அந்தப்பாம்பும் சுவாமிகளின் குறியில் இரண்டு தடவை கொத்தி விட்டு புற்றுக்குள் போய் விட்டது! கொட்டும் இரத்தத்துடன் சுவாமிகள் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தன் போக்கில் போய் விட்டார். நாகப்பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை!! e நூல்: ஞானசித்தர் பூரீ வேங்கட சுப்பையா சுவாமிகள் வரலாறு, 1973. பக்கம் : 5, 13, 14. ஆசிரியர் : P. S. தண்டபாணி செட்டியார் (பட்டுக்கோட்டை), :வெ-8.