பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பிரஞ்சு பாதிரியார் பிரஞ்சு நாட்டில் புகழ்பெற்ற ஒரு நடிகை இருந்தாள் : அவள் நடிப்புக் கலையைத் தனது உயிராக மதித்து வந்தாள். மக்கள் அனைவரும் அவளது நடிப்பைப் போற்றிப் பாராட்டி வந்தனர். அந்த நடிகையோ நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தாள். அப்போது அவளுடைய படுக்கையருகே ஒரு பாதிரியார் இருந்தார். அக்காலத்தில் பிரஞ்சு நாட்டில் நடிப்புக்கலை ஓர் பாவ காரியம் என மதத் தலைவர் களால் நினைக்கப்பட்டு வந்தது. எனவே அந்தப் பாதிரியார் மரணப்படுக்கையில் கிடக்கும் நடிகையிடம் அவளது தொழில் வெட்கப்படக்கூடிய தொழில் என்று ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்தினார். நடிகையோ தன் நடிப்புத் தொழிலை உயர்வான கலைத் தொழில் என மதித்து வந்தவள். ஆகவே பாதிரி யாரின் சொற்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். கோபங் கொண்ட பாதிரியார் இறுதிக்கால மதச் சடங்கை நிறை வேற்றாமல் போய்விட்டார். மதச்சடங்கு எதுவும் நடை பெறாமலே நடிகை உயிர் நீத்தாள். உடனேபோலீஸார் விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றினர். பிறகு அப்பிணத்தைத் தூக்கிப்போய் குப்பை கொட்டுமிடத் தில் போட்டு அதன் மீது சுண்ணாம்புத் தூளைத் தூவி விட்டார்கள். நடிகையின் பிணம் இவ்வாறு மிகவும் கேவலப்படுத்தப்பட்டது. கு நூல்: வழிகாட்டிய பெருமக்கள் (1960) பக்கம் 10, 11. நூலாசிரியர்: தி.தண்டபாணி புத்த கீர்த்தி தேவானந்த ஆசாரியரால் ஸ்ம்வத் 990-ல்உஜ்ஜெயினில் எழுத்தப்பட்ட தரிசனஸாரத்தில் பார்சுவநாதருடைய