பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 காலத்திற்கும் மஹா வீரருடைய காலத்திற்கும் நடுவில் பார்சுவநாதருடைய சிஷ்யனான புத்தர் கீர்த்தி என்ற லந்யாஸிமஹான் பண்டிதனாய் பலிச்சநகா மென்ற நகரத்திற்கு ஸ்மீபத்திலுள்ள ஸ்ரயூ நதிக்கரையில் தபஸ் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சில செத்த மீன்கள் மிதந்து போவதைக்கண்டு அவைகளைத் தின்றால் ஜீவ ஹிம்சையல்ல வென்று நினைத்து தன் தபஸை விட்டு, சிவப்பு வஸ்திங்களைத் தரிக்க ஆரம்பித்து பெளத்த மதத்தை உபதேசித்து வந்தான் என்று சொல்லப் படுகிறது. 0 நூல் மஹாவீரர் (1925) பக்கம். 17 நூலாசிரியர்: ஸி. ஆர். பூரீநிவாஸ் அய்யங் கார், பி. ஏ., (சுதேசமித்திரன்) ராபர்ட்-டி- நொபிலி தத்துவபோதக சுவாமி இத்தாலி தேசத்தைச் சேர்ந்த தஸ்கனி மாகாணத்தில் ஒர் உயர்ந்த பிரபுக் குடுப்பத்திற் பிறந்தவர். நேப்பில்ஸ் நகரத்திலிருந்த ஏசுவின் சபையிற்கல்வி பயின்று, பின்னர் 1606ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். இவர் நமது நாட்டிற்கு வந்த நோக்கம் யாதென்றால், தமிழ்நாட்டு 'உயர் ஜாதி இந்துக்களைக் கிறிஸ்தவ மதத்தில் திருப்பவேண்டும் என்பதே. அதன் பொருட், மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல, இவர் தமது நடையுடை பாவனை களை முழுவதும் மாற்றிக்கொண்டு, இந்து சந்நியாசி வேடந்தரித்து வாழ்ந்து வந்தார். புலாலுணவை நீக்கி, * சைவ உணவை ஒரே வேளை உண்டுவந்தார், நெத்தியிற் சந்தனம் அணிவார். மார்பிற்பூணுல்தரித்துக்