பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 25 களில் நின்று கிறிஸ்து பெருமானின் அருள் மொழிகளை மக்கட்கு எடுத்துரைத்தார். அவர் இங்ங்னம் தெருக் களிற் பேசியபொழுது பிற சமயத்தார் சிலர் அவர்க்குத் துன்பம் விளைத்தனர். கிறிஸ்தவர் தொகை பையப்பையப் பெருகுவதைக் கண்ட பிற சமயத்தாரும் சிலர் போப்பையரது பிர சாரத்தைப் பல ஊர்களில் தடுக்க முயன்றனர். புதிய கிறிஸ்தவர்கட்குப் பல இடையூறுகளை விளைத்தனர். போப்பையர் சாயர்புரத்தை அடுத்த சுப்பிரமணிய புரத்தில் தெருவில் நின்று சொற்பொழிவாற்றுவது வழக்கம். அவர் ஒருநாள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது ஒரம்மை மாட்டுச் சாணத்தைத் தண்ணிரிற் கரைத்து அவர்மேல் ஊற்றி விட்டாள். போப்பையர் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மலர்ந்த முகத் துடன் பேசிக்கொண்டேயிருந்தார். - 0 நூல் , மேனாட்டுத் தமிழறிஞர் (1951) புக் கம் 66, 77, 78, 79 நூலாசிரியர்: டாக்டர் £os a இராசமாணிக்கனார்.