பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பாபுரம் வேம்பய்யர் வள்ளலார் தம் அன்பர்களுக்குச் சித்த நூலின் உண் மையை விளக்கச் செம்பு, ஈயம் முதலிய லோகங்களை ரஸ் வாதஞ்செய்தும் குளிகையும், ஒளடதமும் முடித்தும் காட்டிக் கிணறுகளிலும் குளங்களிலும் எறிவர். வள்ள லார் இவ்விதம் பொன் செய்து காட்டும்போது உபயோ கித்த சில வஸ்துக்களை உணர்ந்த அம்பாபுரத்து வேம்பய் யர் பிறரறியாது எடுத்துக் கொண்டுபோய்த் துருத்தி வைத்து ஊத அனலால் வெடித்துப் புகை மோதி இரண்டு கண்களும் அவிந்தன. சிகிச்சைகளால் குணமடையாது, வள்ளலாரிடம் வந்து நடந்த உண்மையை உரைக்கவே வள்ளலார் நகைத்து ஒரு கையில் ஜலங்கொண்டு அய்ய ரது கண்களை அலம்பிக் கண்கள் தெரியும்படி அனுக்கிர கித்தனர். 0 நூல் : திருவருட்பா (1924) இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் பக்கம் 33. எழுதியவர் மோ. கந்தசாமி முதலியார் .