பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கபீர்தாசர் ஒருநாள் அத்தமிக்கும் வேளையில் மூவர் கபீர்தாசர் வீட்டுக்கு அதிதிகளாக வரக்கபீர் இவர்களுக்கன்னமிடல் வேண்டி மனைவிக்குக் கூற, மனைவி யொன்றுமிலாமை யாலும் கொடுப்பாரிலாமையாலும் திருடிக் கொண்டு வரக் கூற, கபீரும் அவர் மகன் கமாலும் ஒரு கடைக்குள் கன்னம் வைக்கக் கமா லுள்புகுந்து வேண்டிய தானியத்தைக் களவாடி தொளை வழி புகுந்துவருகையில் சொந்தக்காரன் காலைப் பிடித்துக்கொள்ளக் கமால் தானியத்தை தந்தையிடங்கொடுத்து, என் காலை யுடை யவன் பிடித்துக் கொண்டமையால் என் தலையைக் கொண்டு போகவெனக் கபீர் அவ்வகைத் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்து நடந்ததை மனைவிக்குக் கூறினர். மனைவி குமரற்கு விசனமடைந்து அதிதிகளுக்கு அன்ன மருத்தினள். விடிந்தபின் மூவரும் ஸ்நானத்திற்குச் சென்றனர். செட்டி விடிந்தபின் அரசனுக் கறிவிக்க அரசன் சவத்தைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன், 0 நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம் - 211. நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார். சிவபுரக் கோயில் கல்வெட்டு கும்பகோணத்திற் கண்மையிலுள்ள சிவபுரத்தில் கி. பி. 1239-ல் எழுதப்பட்டுள்ள கல்வெட்டொன்று அவ்வூர்க் கோயிலைச் சேர்ந்த இரண்டு சிவப்பிராமணர் கள் புரிந்த சிவத்துரோக இராசத்துரோகக் குற்றங் களைச் சிறிது விரித்துரைக்கின்றது. அஃது அவர்கள் இருவரும் சிவபுரத் தெழுந்தருளியுள்ள இறைவியின் அணிகலன்களைக் கவர்ந்து தம் காதற் பரத்தைக்குக்