பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கொடுத்தும் தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த கோயிற்குரிய நிவந்தப் பொருளை வேறு வகையில் செலவிட்டும், தம் நிலத்திற்குரிய அரசாங்க வரியைக் கெடாமல் மறுத்தும், மற்றும் பல வழிகளில் தவறாக நடந்தும், அரசனது ஆனைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்க அலுவலாளரை அடித்தும், கன்னட வீரர்களோடு சேர்ந்து கொண்டு மக்களைச் சொல்ல முடியாத துன்பங்களுக்குள்ளாக்கி அவர்களிடமிருந்து ஐம்பதினாயிரம்காசுகள் வசூலித்தும் பல்வகைக் குற்றங்கள் புரிந்தனர் என்று கூறுகின்றது. 0 நூல்: பிற்காலச் சோழர் சரித்திரம் (19 5 1 பக்கம்- 198. நூலாசிரியர்: ஆராய்ச்சிப் பேரறிஞர் T.V. சதாசிவ பண்டாரத்தார். (அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழா ராய்ச்சி விரிவுரையாளர்) • * தலைமலை கண்ட தேவர் இவர் மறவர், அந்தகர், கல்வி வல்லவர். மணத்தில் விருப்பங் கொண்டு கன்னிகையைக் கேட்க, அம்மறவர் சாதி வழக்கப்படி மும்முறை களவு செய்து அக்களவில் அகப்படாதவர்க்குப் பெண் கொடுப்பது போல் இவர் களவு செய்யாதவர் ஆதலால் மறவர் இவர்க்குப் பெண் தர மறுத்தனர். இவர் மணஞ் செய்துகொள்ளப் பொன் வேண்டிக் களவின் பொருட்டுத் திருப்பூவணத்திலுள்ள தாசி வீட்டில் அத்தாசியின் படுக்கை அறைக்கண் உள்ள கட்டிலடியில் ஒளித்திருந்தனர். தாசி தான் கட்டிலில் உறங்குமுன் திருப்பூவண நாதர்மேல் செய்யுள் பாடி முடிப்பது போல் கவியாடச் செய்யுள் முடியாது மயங்கு கையில் அடியிலிருந்த தேவர் கேட்டுச் செய்யுளை முடித் தனர். தாசி திடுக்கிட்டு நீவிர் யார் எனத் தேவர் வரலாறு கூறித் தாசியிடம் பொன் பெற்று மணமுடித்துக்