பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 29 0 நூல்: அபிதான சிந்தாமணி (1910) பக்கம் 495, 497. நூலாசிரியர்: ஆ. சிங்காரவேலு முதலியார். துறவியின் திருட்டு ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் உரோமராச்சியத்தை ஐஸ்டீனியன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் பட்டுத் தொழிலின் வளர்ப்பு முறையை அறிய மிகவும் ஆர்வம் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பட்டுப் பூச்சியின் முட்டைகளை வெளி நாட் டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று சீன அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த அரசன் இரண்டு சந்நியாசிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சீன்ாவிற்குச் சென்று பட்டுத் தொழிலின் துட்ப ரகசியங்களை நன்றாகப் பயிற்சி பெற்று வருமாறு அனுப்பினான். மேலும் திரும்பி வரும்பொழுது பட்டுப் பூச்சியின் முட்டைகளை ஒருவருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டு வரும்படியும் கூறினான். அரசனின் ஆணைப்படி அத் துறவிகள் சீனாவிற்குச் சென்று சில காலம் அங்கிருந்தபடியே பட்டு உற்பத்தி முறைகளின் இரகசியங்களை அறிந்து, பிறகு சீனாவிலிருந்து திரும்பும் போது மறைமுகமாக மூங்கில் குழாய்களினாலான தங்க ளுடைய கைத்தடியின் உள் அறையில் பட்டுப் பூச்சியின் முட்டைகளை வைத்து ஒருவருக்கும் தெரியாமல் ஜஸ்டீனி யனிடம் சேர்ப்பித்தனர். 0 நூல்: பட்டுச் செல்வம் (1962) பக்கம் - 23 நூலாசிரியர்: கே. எஸ். லட்சுமணன். - மர்லின் மன்றோ (1926-1962) மர்லின் மன்றோ ஹாலிவுட்டின் காதல் கடவுள்! அமெரிக்காவின் அன்ன நடையழகி! உலகிலேயே,