பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I

கிளியோபாத்ரா சாதாரணப் பெண்ணல்ல-எகிப்து நாட்டின் இளவரசி யாதலால், தெய்வப் பெண்ணாக அவள் கருதப்பட்டாள். மனித இனத்துப் பெண்களே தம் விருப்பப்படி நடக்கலாமென்றால், தெய்வப் பெண்ணைப் பற்றிக் கேட்பானேன்!

அவளுக்கு அடிக்கடி பொழுது போவதில்லை! அச் சமயங்களில் வலிமையும் வீரமும் கொண்ட ஆண்களுடன் கூடி மகிழ்வாள். பிறகு அவர்களை நைல் நதியில் துக்கி எறியச் செய்வாள். முதலைகள் உண்டு மகிழ்வதற்காக!

e கட்டுரையாளர் : சி. என். சரோஜினி.

சித்திராங்கி

சித்திராங்கி-இராஜ ராஜ நரேந்திரன் காமினி. இவள் கொடியவள் ஆகையால் வழக்கத்தில் சித்திராங்கி என்பர், காமலீலையில் இவளை வென்றவர் இல்லை.

0 நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம்-39 , நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார், (சென்னைப் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் உபாத்தி

யாயர்).

சுகந்தை

சங்கரவர்மனுடைய சந்ததி மேன்மேல் வளராமல், சங்கடவர்மனுடன் முடிவடைந்ததால், காஷ்மீரத்திற்கு அரசன் இல்லாமற் போக நேர்ந்தது. உடனே அமைச்சர் களும், ஜனங்களும் ஒன்று கூடி ஆலோசித்து, சங்கரவர்ம னுடைய மனைவியாகிய சுகந்தையை அரசியாக ஏற். படுத்தத் தீர்மானம் செய்தார்கள். பிறகு அமைச்சர் களுடைய வேண்டுகோளுத்கிணங்கிச் சுகந்தை சிங்காதன மேறி, ஆட்சியை ஏற்றுக்கொண்டாள். அவள் இரண்டு