பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 0 நூல் : அபிதான கோசம்(1902) பக்கம்-372. துாலாசிரியர்: ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை. ஜம்புலிங்கம் பெருங் கள்ளக்கூட்டத் தலைவனான ஜம்புலிங்கம் சென்ற மாதம் 22-ம் தேதி மாலை சுமார் 4-மணிக்கு ரிசர்வ் கான்ஸ்டேபில் உடையை அணிந்து கொண்டு பூரீவைகுண்டம் தாலுக்காவிலுள்ள பேய்க்குளம் என்னுங் கிராமத்திற்குள் நுழைந்து சுமார் பன்னிரண்டாயிரம் ரூபா கொள்ளையடித்துச் சென்றானாம். 0 இதழ்: நவ சக்தி 1923-ஆகஸ்டு-3. ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் விலங்கினங்கள், புள்ளி னங்கள் போன்றவற்றின் செயல்களும் பிறவும் விரவி வருவன. ரோவே அவர்கள் ஷேக்ஸ்பியரின் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஷேக்ஸ்பியர் மானொடு மருண்ட செய்தியொன்றினைச் சுவைபட நவில்கின்றார். பொதுவாக அக்கால இளைஞர்கள் வேட்டையாடுதலி லும் குறிப்பாக மானைத் தொடர்ந்து பிறரறியாது. பிடித்தலிலும் வேட்கை மீக்குற்றவராகத் திகழ்ந்துள் ளனர். அக்கூட்டத்தில் இணைந்த ஷேக்ஸ்பியரும் மான் பிடிக்க விழைந்ததாகவும், ஒரு முறை ஸ்ட்ராட் போர் டுக்கு அண்மையில் இருந்த சார்ல கோட் செல்வர்களுள் ஒருவரான தாமஸ் லூசி என்பவரின் பூங்காவில் மானைத் திருடிவிட்டு, அதன் காரணமாக அப்பெருமகனால் சவுக் கடியும், சிறைவாசமும் தண்டனையாகப் பெற்றதாகவும் மொழியப்படுகின்றது.