பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தாமஸ் லூசி கொடுத்த தண்டனை காரணமாகாவே ஷேக்ஸ்பியர் இலண்டனுக்குச் சென்றதாகக் கூறும் மரபு இன்றுவரை நிலவி வருகிறது. ஷேக்ஸ்பியர் காலத்தில் விதிகளின்படி மானைத் திருடுபவர்கட்கு மூன்று திங்கள் சிறைத்தண்டனையும். ஏற்பட்ட இழப்புப் போன்ற மூன்று மடங்கு பணமும்தான் விதிக்கப்படலாமேயன்றி சாட்டையாலடித்தல் இயலாதது என்பர். அன்றியும் தாமஸ் லூசியின் மான் பூங்கா அக்காலத்தில் இருந்ததே இல்லையாகலின் 1794-ல் ஷேக்ஸ்பியர் மானைத் திருடி யது அயர்லாந்துக்கு அண்மையில் இருந்த பல்புரோக்குப் பூங்காவில் தான் என அயர்லாந்து நாட்டு சாமுவேல் என்பவர் கூறுவார். பல்புரோக்கில் உள்ள ஒரு கிராம வீட்டில் 1795-ம் ஆண்டில் ஷேக்ஸ்பியர் அவ்வீட்டில் தற் காலிகமாக சிறை வைக்கப்பட்டிருந்ததாக ஒரு கல் வெட்டு கூறுகின்றது. 0 நூல் : கவிஞர் ஷேக்ஸ்பியர். பக்கம் 25, 26. நூலாசிரியர்: வை. தட்சிணா மூர்த்தி. எம்.ஏ. (தமிழ்த்துறை, தூய. வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி)