பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவகைச் சமயக் குருமாரும்-புத்தரும் பெளத்த மதத்திற்கு ஏற்பட்ட வெற்றியினாலும் தங்களுக்கு உண்டான தோல்வியினாலும் அவமானமும் பொறாமையும் கொண்ட அறுவகைச் சமயக் குருமாரும் புத்தர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள நினைத்தார்கள். அவர்கள் நேர்மையான வழியைவிட்டுக் கீழான இழிந்த முறையைக் கையாண்டார்கள். தங்கள் மதத்தைச் சார்ந்த சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள ஒரு. அழகுள்ள மகளைத் தூண்டிவிட்டு, பகவன் புத்தர் மீது அவதூறு கூறும்படி ஏவினார்கள். அவளும் அதற்கு, உடன் கிட்டாள். . . . சிஞ்சா மாணவிகை, நாள்தோறும் இரவு வேளையில் பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வருவதும் காலை வேளையில் அவ்விடத்திலிருந்து போவதுமாக்ப். பலரும் பார்க்கும்படி பல் நாட்கள் செய்து வந்தாள்.