பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இவ்வாறு பல முறை இவளைப் பார்த்தவர்கள் இவள் மீது ஐயங்கொண்டார்கள். ஊரார் இதைப் பற்றி அவ தூறு பேசவும் தொடங்கினார்கள். பிறகு அவள், வயிற் றில் கருவாய்த்துக் கர்ப்பம் கொண்டவள் போல தடித் தாள். கர்ப்பப் பெண்ணின் வயிறு போன்று மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு சூல் கொண்டவள்போல நடித்தாள். இவ்வாறு நடித்து ஊராரிடத்தில் ஐயத்தையும் அபவாதப் பேச்சையும் உண்டாக்கினாள். - ஒன்பது மாதம் சென்ற பிறகு, ஒரு நாள் மாலை பகவன் புத்தர் தரும போதனை செய்துகொண்டிருந்த அந்தச் சபையிலே சென்று, பகவன் புத்தர் மீது கூடா ஒழுக்கக் குற்றம் சாற்றினாள். தான் கர்ப்பமான துக்குக் காரணமாக இருந்தவர் புத்தர் என்றும், தனக்குப் பிள்ளைபேறு உண்டாகும் காலம் நெருங்கிவிட்டபடி யால் அதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் மத்தியில் சென்று கூறினாள். அப்போது பகவன் புத்தர் தமது உபதேசத்தை நிறுத்திக் கொண்டு, 'தங்காய்! நீ கூறுவது மெய்யா பொய்யா என்பது எல்லோருக்கும் தெரியாது. ஆனால் அதன் உண்மை உனக்கும் எனக்கும் தெரியும்' என்று கூறினார். அப்போது, அதிசயம்! அவள் கர்ப்பவதிபோல வயிற்றில் கட்டியிருந்த மரத் துண்டு அவிழ்ந்து கீழேவிழுந்து அவள் கால் விரல்களைக் காயப்படுத்திற்று! சக்கரன் (இந்திரன்) தனது ஏவலாளர் களே ஏவ, அவர்கள் சுண்டெலிகள் போல் சென்று. கயிற்றைக் கரித்து, அவள் வயிற்றில் சுட்டியிருந்த மரத் துண்டு அறுந்து விழும்படிச் செய்தார்கள்! அப்போது அங்கிருந்த ஜனங்கள் எல்லோரும் உண்மையறிந்து அவளை வைது அடித்துத் துரத்தினார்கள். அவமானம் அடைந்து அவ்விடத்தினின்று அவள் ஓடினாள்.