பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35 e நூல்: கெளதம புத்தர் (1969) (இரண்டாம் பதிப்பு) பக்கம்-172, 173, 174. நூலா சிரியர் : மயிலை. சீனி. வேங்கடசாமி கரிகாற்சோழராசனும் கருணாகரனும் கலிங்கமானது, ஆழ்கடலிலே. ஊசிக் காந்தத் தினாலே ஆகிய கோட்டைகளைக் கொண்டது. அந்தக் கேட்டைக்குள்ளே பெண்களல்லாமல் ஆண் பிள்ளைகள் ஆயிரம் பேர் சுத்த வீரர்களாயிருந்தார்கள். மற்றத் தீவுகளிலே இருக்கிற பேர்கள் அந்தக் கோட்டையைச் கைவசம் பண்ணவெண்ணிக் கப்பல்களிலே படையேற்றிக் கோட்டையின் பேரில்கொண்டுநிறுத்திப் பீரங்கிக்குண்டு களினாலே, ஊசிக் காந்தக் கோட்டையை இடிக்க வேண்டுமானால், அந்தப் பீரங்கிக்குண்டு போகிறபோது அது ஊசிக் காந்தக் கோட்டையாகையினால், வலிய அந்தக் கோட்டைக்குள்ளிருக்கிற குண்டையிழுத்துக் கோட்டைக்கு வலுக் கட்டினாப்போலே, கோட்டைக்கு மேலே குண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆதலால், அந்தக் கோட்டையை ஒருத்தராலேயும் வாங்கக் கூடாம விருக்கிற நாளையிலே. கரிகாற் சோழ ராசாவும் மந்திரி கருணாகரன் புத்தி கோசாரத்தினாலே (கூர்மை யினாலே) கொலு தாசிகளிலே சமர்த்திகளாகவும் யெளவனமான ரூபவர்ணங்கள் வாய்ந்தவர்களாகவும் ஆயிரந் தாசிகளைச் சமுத்திரக்கரையில் மாடி வீடு கட்டி அதில் கொண்டு போய் வைத்து ஆயிரம் பேரும் ஆடை யாபரண பூஷணாதிகளாலும், களப கஸ்தூரி பரிமள சுகந்தாதிகளாலும் அலங்காரம் செய்து ஆயிரம் மாடிகளி லும் ஆயிரம் பேரும் ஆயிரம் பூர்ண சந்திரோதயம் போலே வதனங்களைக்காண்பித்துநிற்கப் பண்ணினான். அந்த நிதானத்தைக் கலிங்கக் கோட்டையார் கண்டு இந்த அதிசயத்தைப் போய்ப்பார்த்துவர வேண்டுமென்று