பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 3

.ே நூல் : தவச்செல்வர்கள் வரலாறு, பக்கம்41, 42, நூலாசிரியர் : R. கல்யாண சுந்தரம்.

நயவேந்தன் மனைவி

நய வேந்தன் பாரியாகிய ஒர் இராசாவின் பெண் சாதி அரண்மனைக்கு நித்தியப்படி வந்து ஊழியஞ் செய்கிற துன்மார்க்கன் என்றொரு வலையனிடம் ஆசையாகி நாள் விளம்பத்திலே (விடியற்காலையில்) பேசி முடித்து அரண்மனையில் சிறு திரவியத்தையும் எடுத்துக்கொண்டு இருவரும் துார ந் தொலையில் போய் இஷ்டமாயிருப்பதாக எச்சரிக்கை செய்கிற வேளையிலே. இருவரும் புறப்பட்டு பட்டினம் விட்டு, நான்கு நாழிகைக்கப்புறம் போகும்போது, ஒரு சிற்றாறு பெருகி வர, அந்த ஆற்றங் கரையில் போய் நின்று ஒர் யோசனை பண்ணினான். நாமிருக்கிற இளமைக்கும் இராச கன்னிகையிருக்கிற ரூபகரத்திற்கும் வெகுதூரம். நாம் இவளைக் கூட்டிப் போயிருக்குமிடத்தில், இவளும் நம் மிடத்தில் இருக்க மாட்டாள். இவளைக் காமுக செய லாளிகள் கைவசம் பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த இராசாவுக்கு நாம் கூட்டிப் போகிறது தெரிந்தால் நாமெங்கே போயிருந்தாலும் ஆள் விட்டுப் பிடித்துக் கொண்டுபோய் வெட்டிப் போடுவான். இனி (என்ன) யோசனைப் பண்ணுகிறது. எறிந்து விட்டதில் தெரிந்: தெடுத்தாய்' (என்றாற் போல), இவளிடத்திலிருக்கிற ஆடை ஆபரணத்தை எல்லாம் கத்தரித்தக் கொண்டு இவளைத் தனியே விட்டுப் போட்டு தாமோடிப் போகிறது என்று (நினைத்து) இராச கன்னி கையைப் பார்த்து, "உன்னிடத்திலிருக்கிற தாலி யையும் ஆடை ஆபரணத்தையும். நீ உடுத்தியிருக்கும் வஸ்திரத்தில் மூட்டை சேர்த்துக் கட்டித்தா நான் இந்த