பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஆற்றுத் தண்ணிரை நீந்தி அக்கரையில் கொண்டு போய் வைத்துவிட்டு, திரும்ப வந்து உன்னை நீச்சலிலே கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்' என்று சொல்லி எல்லா வற்றையும் வாங்கிக்கொண்டு அவளை நிர்மாணத் துடனே விட்டுப்போட்டு ஆற்றைத் தாண்டி, நாற்காத வழி விடிய ஒடிப் போய் விட்டான். அதை அந்த இராச கன்னிகை யறிந்து, நம்மை வலைப்பையல் மோசம் பண்ணி விட்டானே; இனி வந்த வழியே போய் வீடு சேர வேண்டுமானாலும், நிர்வாணத்துடனேஎப்படிப் போகிற தென்று, பாதையிலே யார் வந்து காணுவார்களோ! வெளியிலே நிற்கப்படாது என்று மாரளவு வரைச் சலத்தில் போய் நிற்கிறபோது, ஒர் நரியானது மாட்டு வடக்கைக் கெளவிக்கொண்டு வந்து ஆற்றங்கரையிலே போட்டுப் புசிக்கும்போது, அடுத்தாப்போல், ஒரு மீன் துள்ளி விழுந்ததை நரியானது பாய்ந்து பிடிக்கப் போகிற போது, மீனானது திரும்பத் தண்ணிரில் தாவிப் போய் விட்டது. அந்த நரி திரும்பி வருமுன்னே அந்த வடக் கையைப் பருந்து உராய்ந்து கொண்டு போய்விட்டது. தரியானது ஆகாசத்தை அண்ணாந்து பார்த்து 'நாம் இந்த இருவகையுங்கெட்டு வீணே போச்சுதென்று விசனப் பட்டுக் கொண்டிருக்க இராச கன்னிகை பார்த்து, இந்த தரியானது இருவகையுங் கெட்டாற் போலவே நானும் இருவகையுங்கெட்டு, இராச்சிய பரிபாலனம் பண்ணப் பட்ட சொந்த நாயகனை விட்டுத் துன்மார்க்கச் சோரனு

டன் வந்து இருவகையிலும் கெட்டேனென்று மனிதர்

நகைக்கலாச்சுது என்று எண்ணி வருந்தினாள்.

• நூல்: செயங்கொண்டார் வழக்கம் (1955) (உரை விளக்கத்துடன்) பக்கம்-24,