பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5

பீகம் ரிஸியா

ஆல்த்தமஸ் 1236 வருடத்தில் இறந்த போது அவன் மகன் ரக்ன் அட்டின் பட்டத்துக்கு வந்தான். ஆனல் அவனுடைய துன்மார்க்கத்தினல் அரசாளத் தொடங் கின. அவ்வருஷத்தில் தானே தள்ளப்பட்டான். அப் போது அவன் சகோதரியாகிய பீகம் ரிஸியா பட்டத்துக்கு வந்தாள். துரைத்தனம் நடத்தும் திறமையும் சமர்த்தும் இவளுக்கு வெகுவாயிருந்ததினாலே நீதியாய் இராச்சிய பரிபாலனம் பண்ணி வந்தாள்.ஆகிலும் ஜம்மால் என்ற ஒர் ஆபிசினிய அடிமையை முறைகேடாய் நேசித்ததினி மித்தம் அவளுடைய சொந்தச் சகோதரனும் மற்றப் பிரபுக்களும் ஒன்ரு ய்ச் சேர்ந்து கலகம் பண்ணிப் போர் செய்து அவளையுஞ் சிறையாக்கிக் கடைசியில் கொன்று போட்டார்கள்.

0. நூல் : சரித்திரச்சுருக்கம், அதிகாரம்-1::

பக்கம்-12. -

பிருதிவிராஜன் மகள்

ரத்னன் பட்டத்திற்கு வருவதற்கு முன்பே அம்பர் நாட்டரசனை பிருதிவிராஜன் மகளைத் திருட்டுத்தன மாய் மணம் புரிந்து கொள்ள வேண்டித் தன்னுடைய இருமுனை வாளை அனுப்பி அதைத் தனக்குப் பதிலாக வைத்து விவாகத்தை முடித்துக் கொண்டான். நடந்த ரகசியம் சற்றும் வெளிவராமலிருந்தது. கொஞ்ச காலத் திற்கெல்லாம் பூண்டி நாட்ட ரசனை ஹரன் என்பவன் அவளைத் தான் மணம்புரிய வேண்ட, அங்ங்னமே நடந்த வுடன் அவளைத் தலைநகருக்குக் கொண்டு போய்விட் டான். ஹரனும் புகழ்பெற்ற ஒரு ராஜபுத்ரத் தலைவன். ரத்னனே இவ்விஷயத்தைக் கேள்வியுற்றும் தான் செய்து கொண்ட கள்ள விவாகத்தை மறந்து அசிரத்தையா