பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷葛盛 கிலக் கல்வியைப் பரப்புவதற்கு என்றும் பத்துக் கல்வி அறிஞர்கள் அடங்கிய ஒரு 'கலைக்குழு அமைக்கப்பட் டிருந்தது. ஆனால் அப்பதின்மருள் கருத்து வேற்றுமை பலமாக ஏற்பட்டு விடவே, அவர்களால் பயன்தரத்தக்க காரியம் ஒன்றும் புரிவதற்கு இயலாது போயிற்று. அவர் களுள் ஐவர், மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து, சமஸ்கிருதம், பாரசீகம். அரபி போன்ற மொழிகளைப் படிப்பித்தல் வேண்டும் என்றும் போதிய பண உதவி செய்து அம்மொழிகளில் இன்னும் புதிய நூல் கள் பலவற்றை வெளிவரச் செய்தல் வேண்டும் என்றும் வாதித்தனர். மற்றை ஐவர், உயர்தரக் கல்வி ஆங்கிலத் தில் போதிக்கப்படல் வேண்டும் என்றும் பிற கலைகள் அனைத்தும் தாய் மொழிகளில் கற்பிக்கப்படல் வேண்டும் என்றும் கருதினர். மெக்காலே, பிற்பகுதியினரின் கருத் தையே பூரணமாக ஆதரித்தார். இந்திய மொழிகளை மட்டும் கொண்டு பூரணக் கலை அறிஞர்களாக ஆகி விட முடியாது என்றும் ஆங்கில மொழியில் அரிய நூல் கள் பல இருப்பதால் அம்மொழி பயிலுவதன் மூலமே இந்தியர் உயர்வடைதல் கூடும் என்று கருதினார். உலக மொழிகளுள் ஆங்கிலம் சிறந்து விளங்குவது, மேலும் உலக மொழிகளுள் உள்ள நூல்களைக் காட்டிலும் ஆங் கிலத்திலேயே அரிய நூல்கள் பல எழுதப்பட்டிருக்கின் றன. அரசாங்க மொழியாகவும் அஃது அமைந்திருக்கின் றது. மெக்காலே இக்காரணங்களை எடுத்துக் காட்டி இந்தியர்களுக்கு ஆங்கிலப் படிப்பு அவசியம் என்பதை உறுதிப்படுத்தி விட்டார். 1885-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இந்தியக் கவர் னர்-ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு "இந்திய மக்கள் ஆங்கிலம் படித்தல் வேண்டும்: என்று ஒர் அறிக்கை வெளியிட்டு அதற்கென ஒரு கமிட்டி ஏற்படுத்தினார். மெக்காலே அதன் தலைவராக அமர்ந்தார். தம் ઇજી