பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 முயற்சியுடனும் ஊக்கத்துடனும் இந்தியாவில் ஆங்கில மொழியைப் பரப்பத் திட்டமிட்டார். இருபது வருட காலத்திற்குள் இந்தியர்களே ஆங்கில மொழியில் அறிஞர் களாகித் தங்கள் தாய் மொழிகளுடன் ஆங்கிலத்தைச் சிறப்பாகப் பரப்பி வருவர் என்று அன்று மெக்காலே கூறியது பிற்காலத்தில் உண்மையாகி விட்டது. e நூல் : மெக்காலே பிரபு பக்கம்-53, 54 55. நூலாசிரியர்: P. S. இராஜன். வெளியீட்டாளர்: IK. ப மு னி யா ண் டி. பிள்ளை & கோ; சென்னை. இராசகோபால பிள்ளை கோமளேசுரன் பேட்டையில் அந்நாளில் இராச கோபால பிள்ளை என்பவர் கம்பராமாயணம் இலக் கணம் முதலிய நூல்களில் வல்லவராகத் திகழ்ந்தி. ருந்தார். இராச கோபால பிள்ளை கடுமையான வைணவ மனப்பான்மை கொண்டவர். சைவ சமயத்தினிடத்தும் சிவ பரம்பொருளிடத்தும் அளவற்ற வெறுப்புடையவர். கோமளேசுரன் பேட்டை என்னும் பெயரில் ஈசுவர என்னும் ஒலி இருப்பதற்காக அந்தப் பேட்டையின் பெயரைக் கோமளபுரம் என்று மாற்றிவிட்டார்,மேலும் தம்மிடம் படிக்க வருபவர்களின் பெயரிலும் வைணவ மாற்றங்கள் சேர்ப்பார். வைத்தியநாத முதலியார் என்பவரை வாசுதேவ முதலியாராக மாற்றினார். நடராச முதலியாரை நாரா யண முதலியாராகச் செய்தார். சண்முகம் பிள்ளையின் பெயரோடு சீநிவாச என்பதனையுஞ் சேர்த்துச் சீநிவாக வெ-10 . . . . . . . .” ---