பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சண்முகம் பிள்ளை என்று மாற்றினார். தாம் அச்சிட்ட வில்லிபாரதத்தில் இருந்த சிவபரமான சில பாடல்களை நீக்கிவிட்டு அச்சிட்டார். இவ்வாறு இராச கோபால பிள்ளை அச்சிட்டமையால்தான் ஆறுமுக நாவலர் பாரதத்தை உள்ளபடியே தாம் அச்சிட்டு வெளிப்படுத் தினார். } 0 நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955), பக்கம்: 34. நூலாசிரியர்: சு.அ. இராம சாமிப் புலவர். இராமனும், கிருஷ்ணனும் கடவுள்களா? பஞ்ச பூதங்களில் உற்பவ சக்தியுடைய பிருதிவியைப் பிரம்மாவென்றும், இரட்சிப்புச் சக்தியுடைய ஜலத்தை விஷ்ணுவென்றும், அழிக்கிற சக்தியுடைய அக்கினியை உருத்திரனென்றும், ஒட்டலங்காரமாய் மூர்த்திகளாக்கி அவர்களுக்குப் பெண்டு பிள்ளைகளையும் கற்பித்து, அக் கற்பனைகட் கனுசரணையான கட்டுக் கதைகளையும் கற்பித்துப் புராணங்களாக்கி, இவர்களை ஆராதிக்கத் தாந்திராகம சாஸ்திரங்கம் உண்டாக்கி விடப்பட்டிருக் கின்றன. - இவைகளில் சில ஒரு மூர்த்தியை எங்கள் சாமி என் றும், சிலர் மற்றொரு மூர்த்தியை எங்கள் சாமி என்றும் தொழ ஆரம்பித்துப் பல சமயங்களாய் முடிந்து கல்யாண சந்தடியில் தாலி கட்ட மறந்து விட்டது போல் இவர்கள் மேல் விவரித்த முதற்காரணப் பொருளை ஆராய்ந்து பார்க்கச் சுத்தமாய் மறந்துவிட்டார்கள். முதலாளியை மறந்ததுமில்லாமல் கரும காண்டத்தில் சொல்லிய ஆரா தனைகளையும் கைவிட்டு, இப்போது மனுஷனாகிய இரா மனையும், கிருஷ்ணனையும். சோமசுக்தர பாண்டியனையும்