பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 55 இவர் மனைவி மீனத்துவச பாண்டியன் மகள் மும்முலைத் தடாதகை, உக்கிரவழுதி, கொஞ்ச நாளைக்கு முன் பூர் பெரும்புதுாரில் பிறந்து வளர்ந்து காஞ்சிபுரத்தில் கல்வி கற்று பூரீமத் இராமாநுஜ பாஷியம் அருளிச் செய்ததினி மித்தம் இராமாநுஜா சாரிய ரென்கிற பேருடைய ஒரு ஐயங்காரையும் மற்ற பிராமணராகிய மாணிக்கவாசகர் சம்பந்தமூர்த்தி முதலாகிய பூர்வ காலத்து மனிதரையும் தொழுகிறதற்கு ஆரம்பித்தார்கள். e நூல்: பிரஹ்ம சமாஜா நாடகம் (1871), நூலாசிரியர் : சைதாபுரம் காசி விசுவநாத முதவியார். உன்மத்தா வந்திவர்மன் சக்கர வர்மனுக்குப்பின் உன்மத்தா-வந்திவர்மன் கி.பி.937-வது ஆண்டில் காஷ்மீரத்து அரசனான். அவன் பார்த்தனுக்கு மைந்தன்-தன் மதங்கொண்டு பைத்தியம் பிடித்தவன் போலத் திரிந்தான். ஆகையால் உன்மத்தா வந்திவர்மன் என்னும் பெயர் வழங்கப்பட்டான். அவன் ஒரு சமயம் தன் தகப்பனாகிய பார்த்தனைக் கொன்று விட்டான், கர்ப்பஸ்திரிகளின் கர்ப்பத்திலிருக்கும்போதே சிசுக்களைப் பார்க்க வேண்டுமென்று துராசை கொண்டு ஆயிரக்கணக்கான கர்ப்பிணி ஸ்திரிகளின் அடிவயிற்றைக் கத்தியினால் தன் கையினாலேயே அரிந்தான். அச்சமயத் தில் அவர்கள் பட்ட வேதனையைக் கண்டு மகிழ்ந்து, கைகொட்டி நகைத்தான். - நூல்: ராஜ தரங்கிணி. பக்கம்-ச8.