பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 6 தமிழ் வித்தியார்த்தி விளக்கம் தற்காலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வித்தி யாரம்பஞ் செய்விக்கையிற் சுதேச பாஷாபிமானத்தை யொழித்தவர்களாய் நமது தமிழில் 247 எழுத்துக்களைக் கற்பிப்பதிலும் இங்கிலீஷில் 26 எழுத்துக்களை எளிதிற். கற்பிக்கலாமெனவும், அங்ங்ணம் வித்தியார்த்திகள் கற்ற பின்னர் அப்பாஷையில் வாசகதாட்டியுண்டாமெனவும், அவ்வா றுண்டாய பின் கல்விச் சாலைக் கனுப்பினா லவண் சுதேச பாஷையைக் கற்றுக் கொள்வார்களென. வும், கருதினவர்களாயிருப்பது குன்றாத சத்தியமே. இதற்குக் கலாசாலைகளிற் சுதேச பாஷை கற்பிக்கின்ற உபாத்தியாயர்களே சாஷியம் பகருவர். இங்கிலீஷில் 2-வது 3-வது வகுப்புக்கு வந்த நமது பிள்ளைகள் சுதேச பாஷைகளில் அகrராரம்பஞ் செய்யப் புகுகின்றனர். (ஆங்கிலோ வெர்னாகுலர்) கல்விச்சாலை களில் தினந்தோறும் கற்பிக்கக் குறித்திருக்கும் நேரங்கள் ஆறுமணித் தியாலத்திற்கு மேற்படுவதில்லை. இதில் 5. மணித்தியாலம் ஆங்கிலேய பாஷையைச் சேர்ந்த பற்பவ. பாடங்களும், ஒரு மணித்தியாலஞ் சுதேச பாஷைப் பாடங்களும் போதிக்கப்படுவதுதான் அம்மாணாக்கரி: டைச் சுதேச பாஷைகளில் எவ்வகைத்தான விர்த்திக் கெதிர் பார்க்கக்கூடும்? முற்காலத்திற் சுதேச பாஷாபிமானிகள் தங்கள் பிள் ளைகள் நிகண்டு. திவாகரம், திருப்புகழ், நீதிநூல்கள். சதகங்கள். திருக்குறள் நாலடி நைடதம், பஞ்சதந்திரம் கணக்கதிகாரங்கள் ஐயந்திரிபற ஒதியுணருந்தனையுஞ். சுதேச பாஷை யுபாத்தியாயர்கள் வசத்தில் அப்பிள்ளை களை விடுத்திருந்தனர். இப்போதவ்வாறு செய்பவரிலர்.