பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பொன்னம்மாள் என்னும் ஒருபெண் தண்ணிர் மொண்டு கொண்டிருந்த போது அவள் கால் வைத்திருந்த தரை யிடிந்து அவள் பூமிக்குள்ளே போய் விட்டாள். அவளுக் குச் சொந்தக்காரர் வந்து வெட்டிச் சோதித்தும் அவள் சரீரம் அப்போதகப்படவில்லை. அவ்விடம் பெரிய கிணற்றுப் பக்கமாயிருந்ததனால் அதைச் செவ்வையாக வெட்டிச் சோதிக்கப் பயந்தார்கள். அன்றேயொரு பூசாரி அவ்விடத்தண்டையிலொரு சிறு குடிசை போடு: வித்து அவளைப் பாதாளப் பொன்னியம்மனென்று சொல்லித் தெய்வமாக்கி வன்னிக்கத் தொடங்கினான். சிலர் பேரில் ஆவேசமுண்டாகி அவர்க ளவளைத் தெய்வ மென்றார்கள். பின்னர் அவளுக்கு வெகு பிரபலமாக உற்சவம் பலி காணிக்கை முதலியவைகளும் நடந்து வந்தன. அவளது குடிசைக் கோயிலுங் கற்கட்டிடக் கோயிலாயிற்று. ஆனாற் சில வருஷங்களுக்கு முன் அந்தக் கிணற்றிலே துரரெடுத்த போது அவளது எலும்பு களகப்பட்டன. பிறகு அங்கே யவ்வளவு பிரபலமில்லை. 0 நூல் சைவ மகத்துவ திமிரபாது (1892), பக்கம்-18 நூலாசிரியர்: தஞ்சை மாநகரம் பரசமய குஞ்சர பஞ்சானன சோடசாவ தான அருளப்ப முதலியார். ஐந்தாம் கன்ஸ்ரான்ரையின் கி.பி. 741-ல் மூன்றாவது லீயோ அரசாண்டான். அவன் சிலைகளை இடித்து வீழ்த்தினான். அவனுடைய மகன் ஐந்தாம் கன்ஸ்ரான்ரையின் என்பவன் உருவ வணக்கத்தைக் கண்டித்தான். அவன் பெருங் கொலைப் பாதகன். மூக்கிறைச்சி சாப்பிடுதலில் ஆசையுடையவன்.