பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 தன் அடிமைகளின் மூக்கைத் தானே வெட்டிச் சமைக்கச் சொல்வானாம், 0 இதழ் செந்தமிழ் (தொ. 37) , பக்கம்-457 கம்பராமாயணத்தில் ஆறு பாடல்கள் பூரீ கச்சியப்ப முநிவரர் சென்னை மாநகர்க்குச் சென்று அங்கே சிறிது காலம் வதிந்தார். அப்பொழுது அவ்விடத்துப் பக்த ஜனங்களும், பிரபுக்களும் வேண்டிக் கொண்டபடி விநாயக புராணம், சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் முதலியன இயற்றி, அவர்கள் அடியுறை யாக இரண்டாயிரம் வராகனிட, அதைக் கொண்டு திருவாவடு துறையில் ஆதீன பரமாசாரியராகிய பூர் நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதி மண்டபப் பணி அணி பெறச் செய்வித்தருளினார். - விநாயக புராணம் அரங்கேற்றுஞ் சபைக்கு ஐயாப் பிள்ளை என்னும் ஒரு பெரிய பிரபு "நாம் வர இதென்ன இராமாயணமா’’ என்று சற்றே இகழ்ந்தனர். மற்றப் பிரபுக்கள் முனிவரர்க்கு அதனை மறைத்தும், அவர் தமது புராணத்தை தொடங்காது இராமாயணத்தை எடுத்துக் கொண்டு யாவரும் பிரமிக்கும்படி முதல் ஆறு செய்யுளில் நூறு குற்றம் ஏற்றினார். உடனே அப்பிரபு நூறு வராகனும் பீதாம்பர முதலியவைகளுங் கொண்டு போய், பாதகாணிக்கையாக வைத்துத் தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, சுவாமிகளது மகத்துவம் அறியாத ஏழையை தேவரீர் காத்தருளவென்று, விண்ணப்பஞ் செய்ய, அதன் பின்பு தமதுபுராணத்தைத் தொடங்கி அரங்கேற்றினார். 0 நூல் பேரூர்ப் புராணம் (1884) பூரீ கச்சியப்ப முநிவரர் சரித்திரச் சுருக்கம்,