பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 1 -ணத்தையும் டில்லிப்பட்டணத்தையும்விட்டு வநதுவிட்ட தாலந்தப் பட்டணங்களழிந்து போனதாக அந்தக் கோயிற் குருக்கள் பெருமையோடு பேசிக் கொண்டிருந் தார்கள். அந்தக் கோயில் ஐம்பத்தாறு தூண்கணிறுத்தி மிகவு முயரமாகக் கட்டியிருந்தது. அந்தத் தூண்களின் மேற் பொற்றகடு நெரித்து அங்கங்கு ரத்தின மிழைத்திருந்தது. அந்தக் கோயிற் கட்டிட முழுமைக்குமொரு தூண்டா விளக்கே கட்டியெரிந்தது. அதனொளி எண்ணிறந்த நவவிரத்தினங்களிற்றாவி வீசுங் காந்தியால் கோயில்முழு மையும் பிரகாசித்தது. அந்தக் கோயில் நடுவில் சோமநாத விக்கிரகமிருந் தது. அது ஐம்பது முழவுயரமாகிய வொரே கல்லில் செய்து அதில் நாற்பத்தேழு முழம் பூமியில் மறையஸ்தா பித்திருந்தது. இதற்கு கலியுகாதி முதல் தீபதுரப வாரா தனை நடந்து வருவதாக பிராமணர்கள் சொல்லுவார் கள். இதனபிஷேகத்துக்கு உதயகாலமுஞ் சாயங்கால மும் ஆயிரத்திருநூறு மயில் தூரத்திலிருக்குங் கங்கை நதி யிலிருந்து சலம் வரும். அந்தக் கோயிலைச்சூழபொன்னா லும் வெள்ளியாலுஞ் சிற்றுருவங்களாச் செய்யப் பட்ட விக்கிரங்களைப் பந்திபந்தியாக வைத்திருக்கும். அதைப் பார்க்கும் போது தேவர் பெருங்கணங்கள் அடங்கிய கோயிலாகத் தோன்றும். - இந்தக் கோயிலிலுள்ள திரவியத்தையு மிந்த தெய்வ மிரட்டலையு மகமது கேட்டு தன் செளரியத்தைச் செலுத்திப் பார்க்கத் துணிந்து அளவற்ற சேனையோடு குசினியை விட்டுப் புறப்பட்டு முல்த்தானென்றும் அசுt ரென்றுஞ் சொல்லப்பட்ட நாடுகளின் மேல் வீழ்ந்து தன் பிரயாசையினாலுஞ் சாமர்த்தியத்தினாலுந் தன் சேனை