பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 73 பூசை கிடையாது. விக்கிரகங்கள் பொம்மை கிடையா: உபநிஷத் காலத்திலும் தர்சனா காலத்திலும் கூட அர்ச்சா மார்க்கம் இருந்ததில்லை. பெளத்த ஜனங்களிட மிருந்து ஹிந்துக்கள் கற்றுக் கொண்ட வித்தையிது. புத்தருடைய காலத்துக்குப் பிற்பட்ட காலங்களில் பெளத்த ஜனங்கள் பகவான் புத்தர் கூறிய உபதேசத்தை மனத்தால் எட்டியறிய முடியாமல், அவரையே தெய்வ மாக எண்ணி, அவரைப் போன்ற பொம்மைகளைச் செய்து அந்தப் புத்த பொம்மைகட்கு இந்திரன், சந்திரன் முதலிய தேவர்கள் குடை பிடித்தல், சாமரை வீசுதல் முதலிய உபசாரங்கள் செய்வதாகப் பொம்மைகள் செய்து அமைத்து கோயில் கட்டி உற்சவாதிகள் செய்ய ஆரம்பித்தார்கள். பாமர சனங்கட்கு வேடிக்கையும், பாணமும் மத்தாப் பும் மேள தாள காபுறாவும் மெய்ம்மத மாதலான், கணக்கிறந்த சனங்கள் பெளத்த மதத்தில் சேர்ந்துவிட ஆராம்பித்தார்கள். இதைப் பார்த்தார்கள் அக்காலத் துப் பிராமணர்கள்; இதேதடா வம்பாயிருக்கிறது,இந்து மதம் அழிந்து போம் போல் இருக்கிறதே என்ன செய்ய லாம் என்று யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வந்தார் கள். பிற்பட்டு ஆலயங்கள் கட்டப்பட்டன. பொம்மைகள் வைக்கப்பட்டன. விக்ரஹ பூசை செய்தார்கள். வாண வேடிக்கையும் மேளதாளமும் கூப்பாடும், காபுறாவும் உற்சவமும், நடன கேளிக்கை சங்கீதமும் இவை போன்ற பல விஷயங்களும் இந்துக்களால் தழுவப்பட்டன. சனங் கள் உற்சாகமடைந்தார்கள். ஹிந்து மதத்துக்குப் புதிய வலிவும் வந்துவிட்டது. - - -