பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 திருந்தனன். அவனுக்கு, சான்ட் பீபி என்னும் அழகுடைய மகள் ஒருத்தியிருந்தனள். அவள் ஒருநாள் தன் தந்தை யின் வீட்டுக்குப் பின்னுள்ள ஒரு நந்தன வனத்தில் தன் தோழிகளுடன் உலாவி இருந்தன ள். சிரோப் சிங், அவ் வழியாக வேட்டையாடி வரும்போது அவளைக் கண்ட னன். அவளது பேரழகு அவனுடைய மனத்தை உருக் கியது, அவள், செயற்கை அழகாம் ஆபரணங்கள் முதலி யன இல்லாமலே, உலகிற் சிறந்த உருவினளாய் இருத் தல் கண்டு, மன்னவன் அவளை மணம்புரிய எண்ணம் கொண்டான். என்றாலும், அவன் முன்னதாகவே ராம்பாயை மணம் செய்து கொண்டமையின், அவன் தன் இளமையின் சேஷ்டையால், அப்பெண்ணைப் பிறரறியாதபடி நேசித்து, அவளுடன் வாழ்ந்து வந் தன ன. + சான்ட்.பீ.பி. சில நாட்களுக்குப் பின் ஒரு மகனைப் பெற்றனள். அதை அறிந்த மன்னன், இனி அவளைத் தன்னுாரில் வைத்திருப்பது, தன்னுடைய கெளரவத்திற் குக் குறைவாகும் என்று அறிந்து, அவளை அவன் தந் தையுடன் வேண்டிய பொருள்களைக் கொடுத்து வேற் றுரருக்கு அனுப்பி விட்டனன். அவள் சென்ற ஒரு வருடத் திற்குப் பின்னரே, ராம்பாய் தேஜஸ்சிங்கைப் பெற் றனள். சாட்ன் பீபி தன் தந்தையுடன் ஹைதரா பாக் கத்துக்குச் சென்றாள். அங்கு சில வருடங்களுக்குப் பின் காதரும் இறந்தான். அவன் மகள் தன் தந்தையின் பிரிவால் வருந்தி, அவ்வருத்தத்தை ஒருவாறு தனது மகனால் மாற்றிக் கொண்டு, அவனைப் பள்ளிக்கு விட் டனள். பள்ளியில், அப்பாலகன் மிகவும் திறமையாய்ப் பாடங்களைப் படித்து அக்காலத்தில் இன்றியமையா வித்தையெனக் கருதப்பட்ட போர்த் தொழிலிலும் பழகி வந்தான். அவனுக்கு சான்ட்பீபி தாவுத் கான் என் னும் பெயரிட்டனள். -