பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சுல்தான் சஞ்சர் சுல்தான் சஞ்சருடைய அவையில் ஆதரவு பெற்ற புலவர்களில் அலி அவ்ஹாதுத்தீன் அன்வரியும், அமீர் முயிஸ்ஸியும் முக்கியமானவர்கள். அமீர் முயிஸ்ஸி யிடம் சஞ்சர் மிகுந்த பற்றுதல் கொண்டிருந் தார். ஒரு தடவை ஸஞ்சர் எய்த அம்பு ஒன்று தற்செய லாக வழிதவறி முயிஸ்ஸியின் மீது தைத்துவிட்டது. அதனால் (கி.பி. 1148) முயிஸ்ஸி மாண்டார். இவரு டைய திவானில் பதினையாயிரம் பாட்டுக்கள் உண்டு. சஞ்சருடைய காலத்தில் மிஹஸ்தி என்றொரு பெண் கவியும் இருந்தாள். இவள் மிகப் பிரபலமாகியிருந்தாள். மகிழ்ச்சி துள்ளும் இதயமும், ஒழுக்கங்கெட்ட நடத்தை யும் உடைய இப்பெண் துடுக்கான நாவும்,கூர்த்த மதியும் உடையவள். இவள் சுல்தான் சஞ்சரின் ஆசை நாயகியும் கூட என்கிறார் தெளலத்ஷா. இவளுடைய வெற்றி மிகு ருபாயியாத் யாவராலும் போற்றப்பட்டன. 0 நூல்: பாரசீகப் பெருங்கவிஞர்கள், 1955, பக்கம் - 19. ஆசிரியர்: ஆர்.பி.எம். கனி, பி.ஏ. , பி.எல்., தித்தா கூேடிமன் (கி.பி. 950) பர்வ குப்தனுக்குப் பிறகு அவன் புதல்வனாகிய கேrம குப்தன் கி. பி. 950-வது ஆண்டில் அரசனானான். அவன் நடத்தை மிகவும் வெறுக்கத் தக்கதாயிருந்தது. சூதாடுவதிலும், மது பானம் செய்வதிலும், பிறருடைய பெண்டிர்மீது காதல் கொள்வதிலும் அவனுக்கு விருப்பம் அதிகம். அவன் உயர் குலத்திற் பிறந்தவர்களையும், கலைகளைக் கற்றவர்களையும், நல்லொழுக்க முடைய வர்களையும் ஏளனம் செய்தான்; தன்னைக் காணவந்த வர்கள்மீது பைத்தியக்காரனைப்போல எச்சில் உமிழ்ந்