பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I படுத்த வேண்டி அவளுக்கும் அவளுடைய சிநேகிதை களுக்கும் ஒர் விருந்து அளித்தான். விருந்து நடந்து கொண்டிருந்தபோது வேண்டுமென்றே போரஸ் மீது குளிர்ந்த பானத்தை ஊற்றிவிட்டு அதைத் துடைக்கும் பாவனை காட்டி அவளை அப்படியே தன் தனியறைக்கு த் தூக்கிச் சென்று விட்டானாம். வெகு நேரம் வரையில் அவர்கள் வெளி வராததால் விருந்துக்கு வந்தவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டது. பின்னர் அப்பெண்ணின் கணவன் வந்தான். விஷயத்தை அறிந்து கோபித்துக் கொண்டான். போரஸ் கணவனிடமிருந்துவிவாகரத்து பெற்று நெப்போலியனுடன் பலர் அறிய வாழ்ந்தாள், சில காலங் கழித்து போரஸ் மீது பற்றுதல் நீங்கவே அவளை தானே முன் நின்று வேறொருவனுக்கு மணம் செய்து விட்டான். 0 இதழ்: மானிட இன்பம். செப்டம்பர் 1950. மலர்-3 இதழ்-9. பக்கம்-77. பண்டரிபுரத்தரசன் கானோபாத்ரை-இவள் மங்கள வேடு என்னும் கிராமத்திலிருந்த அழகு மிகுந்த தாசி. இவள் மிக்க அழகுள்ளவளாதலால் பூமியிலுள்ள மனிதர் ஒருவரும் தான் விரும்பத்தக்கவரல்லர் என்று ஆசையொழித்துப் பண்டரிபுரத்துப் பெருமாள் விஷயத்திலீடுபட்டு ஆண்டுச்சென்றனள். அவ்விடத்தில் பெருமாளைப் பஜனை செய்து வருகையில் ஒருவன் அரசனிடஞ்சென்று இவளது அழகு முதலியவைகளைக் கூற அரசன் இவளைத் தனது சமூகத்திற்கு வரும்படி கட்டளை யிட்டனன், e நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம் - 266. நூலாசிரியர்: ஆ. சிங்கார வேலு முதலியார். (சென்னைப் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் உபாத்தியாயர்)