பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பப்பா குகனும் அவனது சந்ததியாரும் ஒன்பது தலைமுறை களாக 250 வருஷகாலம் ஆண்டு வந்தனர். ஒன்பதாவது நாகதீதன் என்பவன் மலை நாட்டாரோடு சண்டை. போட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அவனுடைய, மைந்தனாகிய பப்பா சிறு பையனாயிருக்கும்போது பசுக் களை ஒட்டிக்கொண்டு காட்டுக்குப் போய் அவைகளை மேய்த்து வருவது வழக்கம். ஒருநாள் காட்டில்மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அருகிலுள்ள சோளங்கி ராஜ புத்ரத் தலைவனது புத்திரி சில கன்னிகைகளுடன் அதே காட்டிற்கு ஊஞ்சலாடி விளையாடி பொழுதுபோக்கும் வண்ணம் வந்தாள். வந்தவர்கள் மரத்தில் ஊஞ்சல் கட்டக் கயிறு கொண்டுவர மறந்து விட்டதனால் பக்கத் தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபப்பாவினிடம்சென்று ஒரு கயிறு இரந்தனர். இதற்குப் பப்பா அவர்கள் ஊஞ்சல் விளையாட்டுக்கு முன் ஒரு விவாக விளை யாட்டுக்கு உடன்பட்டால் தான் கயிறு கொடுப்பதாகச் சொன்னான். அவ்வாறே விவாக விளையாட்டு ஆரம் பித்தார்கள். பப்பாவையும் அந்த ராஜபுத்ர கன்னி கையையும் சேர உட்கார வைத்து அவர்களுடைய வஸ்திரங்களின் நுனியை முடிபோட்டு உட்காரவைத்து அவர்களைச் சுற்றிலும் விவாக கோலமாகவே நின்று கொண்டு இவ்விளையாட்டை உண்மையான விவாகம் போலவே நடத்தினார்கள். பின்னால் இவ்விளையாட்டு வினையாகவே முடிந்தது. இது நடந்த கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்த ராஜ புத்ரியின் கல்யாணத்திற்காக அவள் தகப்பன் தன் புரோகிதனை அழைத்து அவளுடைய ஜாதகத்தைப் பார்த்தபோது அப்புரோகிதன் அவளுக்கு முந்தியே விவாகம் நடந்திருக்கவ்ேண்டுமென்றான். இச் செய்தி கேட்டதும் தகப்பன் இன்னதுசெய்வதென்று தெரியாமல்