பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எங்கெங்கே எந்த விலைமாது இருக்கிறாள் என்பது நெட்டுரு. அவர்களுக்குள் அழகில் சிறந்தவர்கள் அவ லுக்குச் சொந்தம்; குடிகளும் அவனை அதற்காக வெறுக் காமல் அவனுடைய ஆண்மையைப் போற்றினார்கள். பிம்பிசாரனுடைய கண்மூடித்தனத்தால் விலை மாதர் கொம்மாளம் அடித்தார்கள். தனக்குப் பிம்பி சாரன் மூலம் குழந்தை பிறந்ததென்று ஒவ்வொருத்தியும் சொல்லிக் கொண்டாள். அதன் செலவுக்குப் பணம் வேண்டும் என்று சொல்லி, அரண்மனைக் கஜானா வையே அவர்கள் காலி செய்தார்கள். பிம்பிசாரன் அம்பாபாலியின் அழகுக்கு வசியமாகி அவளுடன் ஒரு நாளைக் கழித்தான். அவள் ஓர் இரவுக்கு ஐம்பது "தக பணம்’ (தொகை) வசூலிப்பவள். அவளுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். "அபயன்’ என்பது அவன் பெயர். பின்பு அவன் பெளத்த பிட்சுவாகி, விமலகன் என்று பெயர் பெற்றான். | o இதழ் மஞ்சரி (ஜூலை-1953) கட்டுரை யாளர்: அட்ஸு மில்லி. பலக்புகார் பலக்புகார்-ஒரு மிலேச்ச அரசன். இவன் கபீர் தாசரிடத்தில் உபதேசம் பெற்று அதை மறந்து ஒருநாள் தன் படுக்கையில் வந்து தன்னைக் கூடாது ஒரு புறமாகப் படுத்துறங்கின தாசியை நான்கு சவுக்குகள் முறியுமளவு அடிக்கும் படி கூறித் தானும் பார்த்திருக்கையில் தாசி அடிபட்டும் தான் அழாதவளாய்ச் சிரித்துக் கொண்டு வருதலை நோக்கி அரசன் அவளை என்னே சிரிக்இன் றனை என்றனன். தாசி படுக்கையின் ஒரு புறத்திலுறங் கின எனக்கு இவ்வளவு தண்டனையான்ால் முழுவதிலும் படுத்துறங்கின உமக்கு எவ்வளவுண்டாகுமெனச் சிரித்