பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வேடிக்கையாகவும் உல்லாசமாகவும் காலங்கழித்தான் என்று பழங்கால வரலாற்றில் கூறப்படுகின்றது. e நூல்: வெற்றி வீரன் ஜூலியஸ் nசர்(1955) பக்கம் - 57 நூலாசிரியர்: R. பத்மநாபன் B. A., B. T..(துணைத்தலைமையாசிரியர், முனிசிபல் உயர்நிலைப் பள்ளி, வேலூர்) ஷெர்ஷா ஷெர்கான் ஷெர்ஷா என்று பட்டஞ்சூடி.டில்லியிலே 1540-ம் வருஷம் சிம்மாசனம் ஏறினான். ஐந்தே வருஷ காலந்தான் அரசாண்டான். ஷெர்ஷாவோ ஆளழகன். அதிசூரன், மகாவீரன் - அவன் புகழோ வட-இந்தியா வெங்கும் பரவி யிருந்தது. ஆதலின் அத்தகையானை மணக்க மங்கையர் சிலர் ஆசை வைத்தல் இயற்கை. அன்னவரிடம் திரவியமிருந்தால் போதும். அழகு.அன்பு, அறிவு, குணம் இவை உண்டா-என அவன் எண்ணிப் பாரான் . அன்னாரை உடனே மணந்து கொள்வான். மல்லிகா எனும்'மாதொருத்தி. அவள் ஒரு மாகாண கவர்னரின் மனைவி. இளையாள் மைந்தன் அரசை நச்சி அப்பனைக் கொன்றான். மல்லிகாவுக்கோ அம். மைந்தனைப் பழிவாங்கவேண்டுமென்று ஆவல்.ஷெர்ஷா , வுக்குத் தூது விடுத்தாள். அவளிடமோ நிரம்பப் பணம் உண்டு. அம் மாகாணமும் வளமை மிக்கது. அவள் கருத்தைப் பூர்த்தி செய்து, அவளை மனைவியாகக் கொண்டு களித்தான் ஷெர்ஷா. பீஹார் வேந்தனது காமக் கிழத்தி ஒரு கட்டமு.கி. அவளிடம் செல்வம் திரண்டு கிடந்தது. அவளுக்கு ஒரு