பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மகன். அம் மகனுக்கு உற்ற துணைவனாக ஷெர்ஷா விளங்கினான். அம் மகன் மரித்ததுதான் தாமதம்" அவளைத் தேவியாக அடைந்தான். அவளது செல் வத்தையும் ஆண்டனுபவித்தான். அயோத்தியிலே நவாபாக இருந்தவனுக்கு ஒரு குமாரி. அவள் அழகற்றவள். ஆயினும் தலைமுறை தலைமுறையாக அயோத்தி நவாபின் அரண்மனையில் பொன்னும் மணியும் குவிந்து கிடந்தன. தந்தை இறந் ததும், அவள் பொன் மகளாகவே துலங்கினாள். அதனை யறிந்த ஷெர்ஷா அவளை மனையாளாகக் கொண்டான். அவள் பொக்கிஷத்தையும் பெற்றான். சம்பல் பிரதேச அதிபன் நஸ்ாகான். அவன் கால மாகி விட்டான். அவன் மனையாள் தனியே நின்றாள். ஷெர்கான் மீது அவள் இச்சை கொண்டாள். இதனை அவன் அறியான். எனினும் அவளிடம் மிகுந்த பொன் னுண்டெனக் கேள்வியுற்றான். உடனே பரியைத் தட்டி விட்டான். சம்பல் பிரதேசஞ் சேர்ந்தான். அம் மாதினைக் கண்டான். இனிய சொல்லால் அவளை மயக்கினான். அவளும் கருதிய கணவன் கிட்டினானெனக் களித்தாள். முந்நூறு மணங்கு தங்கம் அவளிடமிருந்து கிடைத்தது. களிஞ்சர் என்று ஒரு பிரதேசம். அது ஒரு ராஜ புத்திரன் ஆட்சிக்கு உட்பட்டது. அங்கே அழகின் அவதாரமான கணிகை யொருத்தியிருந்தாள். அவளிடம் தனம் குன்றுபோல் குவிந்திருந்தது. அது கேட்டு வுெர்கான்படை கொண்டு பாய்ந்தான். அப்பிரதேசத்தின் மீது. கணிகையர் குலத்தினாளாயி னும் அவள் கற்பரசி. அவள் பொருட்டு அன்னியன்