பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூத்தாள் ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகட்கு முன்னர் தொண்டை நாட்டிலே செங்காட்டங் கோட்டத்தைச் சேர்ந்த துறையூரில் பொய்யாமொழிப் புலவர் பிறந் தார். ஒருகால் அப் புலவர் பெருமான் காளை யார் கோயில் என வழங்கும் திருக்கானப்பேர் என்னுஞ் சிவத்தலத்துக் குச்சென்று, அங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் அடிகளாரை வழிபட்டு மீளுங்கால் பெருமழை பெய்யக் கூத்தாள் என்னுந் தேவ மாது ஒருத்தி அகத்தை அடைந்தனர். ஆண்டு சிறிது நேரம் தங்கியிருந்த போது, அவளும் அவள் தமக்கையும் தாயும் பாட்டியும்