பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆகிய நால்வருங் குருடராய்க் கையால் தடவித் தடவிச் செல்வதை நோக்கி, மனங்குழைந்து, அந்நால்வருக்கும் கண் வருதல் வேண்டுமெனத் திருவுளங்கொண்டு, 'கூத்தாள் முகத்திரண்டு கூர்வேல்கள்; கூத்தாள்தன் மூத்தாள் முகத்தில் முழுநீலம்- மூத்தாள்தன் ஆத்தாள் முகத்தில் அரவிந்தம்; ஆத்தாள்தன் ஆத்தாள் முகத்திலிரண் டம்பு’ என்றோர் அரும்பாட்டு இசைப்ப அனைவரும் அழகு மிக்க ஒளி வீசும் விழிகளைப் மெற்றுக் கங்கு கரையற்ற இன்பமுடையவராய்ப் புலவர் பெருமானைப் போற்றி வழிபாடாற்றினர். - பின் அங்குச் சின்னாள் வைகி, அத்தலத்தை விட்டு நீங்கிப் பல அறிய திருப்பதிகட்குச் சென்று வணங்கிச் சிறிதுகாலம் சென்றபின் கானப்பேருக்கு மீண்டனர். அங்குப் போந்ததும் தாம் முன்னர்க் கண் பெறப்பாடிய கணிகையர் செவ்வியை உணர விரும்பி, அவர் இருக்கை யைத் தேடிச் சென்றனர். அவர்களோ கண் பெற்ற காரணத்தால் அழகு மிகப் பெருஞ் செல்வர் கண்களைக் கவர்ந்து, தன்னிதி பலவும் ஈட்டிச் செல்வத்திற் சிறந்திருந் தனர். அஃதுணர்ந்த உத்தமக் கவிர்ை அவரது பெரு வாழ்விற்கு உவந்து, அவரது மாளிகையிற் சென்று கதவைத் தட்டினர். அவர்கள் இவரை இன்னாரென அறிந்தும். 'முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும்'. என்னுந் திருவாக்கின்படி தம்மைத் தாமறியாமலும், கண்கொடுத்த தெய்வம் என அவரை மதியாமலும், கதவைத் திறவாது வாளாவிருந்தனர். அவர்தம் இறு மாப்பையும் நன்றியறியாக் கயமையையும் கண்டு, செந் தமிழ் வாணர் சினமீக் கூர்ந்து பழைய குருடி கதவைத்