பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 திறடி என்று கூறினர். கூறியவுடன் அந்நால்வருள் மிக்க இளையாளாகிய ஒருத்தியின் கண்கள் இரண்டும் பொட் டென அவிந்தன. "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை'. என்னும் புலவர் வாக்குப் பொய்ப்படுமோ? அப்போது அவளும் மற்றையோரும் புலவர் செந்தாமரைச் சேவடி களில் அடியற்ற பனையென விழுந்து கைகட்டி வாய் பொத்தி, "எங்குல தெய்வமே, அடிச்சிமார்கள் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். எமது அறி யாமையால் யாம் பிழை செய்தலும் இயல்பே; அவற் றைப் பொறுத்தருளலும் தேவரீருக்கு இயல்பே, என்று பலவாறு பன்னிப்பன்னி ஏத்தி நடுநடுங்கி அவர் அருளை எதிர்பார்த்தவண்ணம் நின்றனர், அருள்மிகுந்த நெஞ் சினராகிய அருந்தமிழ்ப் புலவர், அவர் செருக்கோழிந்து பிணம்போற் கிடத்தலைக் கண்டு இரங்கி, அகந்தையால் அவிந்த கண் மீண்டும் பெறும்படி அருள் புரிந்தார். 0 நூல் : தொண்டை நாட்டுக் கவிகள் (1948), பக்கம் 73, 7 9, 80. நூலாசிரியர்: மணி திருநாவுக்கரசு முதலியார். மாதவி பெரியகடலாற் சூழப்பட்ட உலக மதிக்கும்படி அந்தப் பெண்ணுக்கு அன்பாய்க் கண்ணகியென்னு மழகிய பெய ரிட்டு, முன்னே தாங்கலாற்றில் பேசிக் கொண்டபடி சிறந்த நூலினெறிப்படி விவாகஞ் செய்வித்தார்கள். மேகம் போலக் கொடுக்குங்கையனாகிய கோவலன் அக்கண்ணகியை மணஞ்செய்தான். திருமணஞ்செய்துவருங் கல்யாணப் பந்தலிடத்து. தாசியின் தாயாகிய சித்திராவதியிடத்திற்போய் உனது